பாகிஸ்தானின் ராவல்பிண்டியில்  தென்னாப்பிரிக்காவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி குரூப் பி ஆட்டத்தில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது .  தொடர்ந்து லேசான தூறல் பெய்ததால், மைதானமும் மூடிய நிலையில் இருக்கிறது. மேலும் பிற்பகலில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மேல் டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கினாலும் ஓவர்கள் குறைக்கப்பட்ட போட்டியாகவே நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

கராச்சியில் நடந்த ஆப்கானிஸ்தானை எதிர்த்து தென்னாப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரியான் ரிக்கல்டன் தனது முதல் ஒருநாள் சதத்தை 315-6 என்ற வலுவான ஸ்கோரில் பதிவு செய்தார். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.