சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் கூடும்.

அதேபோன்று வருகிற 17-ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள ஓர் இரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26-27 டிகிரி செல்சியஸும் இருக்கக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக் கடல் பகுதிகளுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.