இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திரன் 3 பிரக்கியான் ரோவர் என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அனுப்பியது. இந்த விண்கலம் 40 நாட்கள் விண்வெளியில் பயணித்து நிலவின் தென் துருவத்தை ஆகஸ்ட் 23ஆம் நாள் அடைந்தது. சந்திராயன் 3 நிலவின் தென் துருவங்களில் உள்ள பல பகுதிகளில் கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பிரக்யான் ரோவர் விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் பழமை வாய்ந்த பள்ளங்கள் உருவாகி உள்ளதை கண்டறிந்துள்ளது.

இந்தப் பள்ளங்கள் விண்கலம் தரையிறங்கிய பகுதிக்கு அருகிலேயே உருவாகியுள்ளது என அகமதாபாத் அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்பள்ளம் சுமார் 160 கிலோமீட்டர் பரப்பளவில் காணப்பட்டுள்ளது எனவும்,மிகவும் பழமை வாய்ந்த பள்ளம் எனவும் கூறப்படுகிறது.இது நிலவின் மேற்பரப்பில் உள்ள எய்ட்கென் பேசின் பள்ளத்தாக்கு உருவாவதற்கு முன்னரே உருவாகிய பழமை வாய்ந்த பள்ளமாகும் என கூறியுள்ளனர்.மேலும் பிரக்யான் ரோவர்

எய்ட்கென் பேசின் பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 1400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளங்கள்,பாறைகள், சிதைவுகள்,படிமங்கள் போன்றவற்றை புகைப்படங்களாக பூமிக்கு அனுப்பியுள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், ரோவர் விண்கலம் பகிர்ந்த புகைப்படங்கள் தெளிவாக உள்ளது. இது நிலவின் புது பரிமாணங்களை பற்றி அறிய உதவுகிறது. மேலும் நிலவு மற்றும் புவி குறித்து பல்வேறு வரலாறுகளை அறிய உதவியாக உள்ளது எனவும் கூறியுள்ளனர்.