சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரனவ் கிரான்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றுள்ளார். இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார் 15 வயதான பிரனவ். நான்கு தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவை சேர்ந்த 19 வயதான கவுஸ்வ் சட்டர்ஜி இந்தியாவின் 78வது கிராண்ட் மாஸ்டராக அறிவிக்கப்பட்டார். ஐந்து வயது முதல் செஸ் விளையாடி வரும் பிரனவ் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல பட்டங்களை வென்றிருக்கிறார். தற்பொழுது அவர் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்து இருக்கிறார்.