
சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபையில் அதிக எண்ணிக்கையில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதி அளிப்பதற்கு என்ன திட்டம் உள்ளது? என்று பொது தீட்சிதர்கள் தரப்பு அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு. கனக சபையில் ஒரே வழியைப் பயன்படுத்துவதற்கு பதில், மற்றொரு வழியை அமைப்பது குறித்தும் விளக்கம் அளிக்கவும் உத்தரவு.
இவ்விவகாரத்தில் அறநிலையத்துறை கருத்து தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சுவாமிக்கு நேர் எதிரில் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறை வலியுறுத்தல்