
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அக்டோபர் 2-ம் கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கூறி திருமாவளவன் வீடியோவும் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் விசிக கட்சி ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தும் கருத்துதான் என்று கூறினார். அதன் பிறகு கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டதாக சலசலப்பு எழுந்த நிலையில் கொள்கை வேறு கூட்டணி வேறு. மது ஒழிப்பு மாநாட்டிற்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. திமுக கூட்டணியில் தான் விசிகத் தொடர்கிறது என்று திருமாவளவன் விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் பாஜக கட்சி திருமாவளவன் கேட்டது நியாயமான கருத்து என்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதற்கு தாங்கள் ஆதரவு கொடுப்பதாகவும் கூறியிருந்தனர். திருமாவளவன் நடத்தும் அது ஒழிப்பு மாநாடு மற்றும் அவர் வெளியிட்ட வீடியோ போன்றவைகள் தான் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் திமுக அமைச்சர்கள் பலரும் கூட்டணியில் பிரச்சனை இல்லை என்று தான் கூறி வருகிறார்கள். அதன்பிறகு இது குறித்து பேசிய திருமாவளவனும் தேவையில்லாமல் கூட்டணியை கலைக்க முயற்சிக்கிறார்கள் என்று கூறிய நிலையில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலினை அவர் சந்திக்கிறார். மேலும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுப்பேன் என்று அவர் கூறியுள்ளார்