
மதுரையில் சூரிய பிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 1 வயதில் தரன் தேவா என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது மனைவியின் சகோதரி குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக குடும்பத்தினருடன் சிவகங்கைக்கு சென்றுள்ளார். அங்கு குங்கும டப்பாவை வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென அதனை விழுங்கி விட்டது. இதனையடுத்து குழந்தை மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டதை பார்த்த குடும்பத்தினர் வாயிலிருந்து குங்கும டப்பாவை எடுக்க முயன்றுள்ளனர்.
ஆனால் குழந்தை மயங்கியதோடு வாயிலிருந்து ரத்த கசிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குழந்தை தரன் தேவாவை சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.