ஈராக் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி டெரன் சமீர் அகமது, சீனா சென்று கொண்டிருந்த விமானத்தில் திடீரென உடல்நலக்குறைவு அடைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாக்தாத்-குவாங்சோ விமானம் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணித்த சிறுமிக்கு இதயத் துடிப்பு இல்லை என விமான நிலைய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் மரணத்திற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.