சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே நேற்று கொரட்டூர் ரயில் நிலையத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் ஒருவரை ஒருவர் ஜல்லி கற்களால் தாக்கி கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் 5 சிறுவர்கள் உட்பட 9 கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.