ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.  அந்தவகையில் EPS ஈரோடு கிழக்கில் இபிஎஸ் பிரச்சாரம் செய்தபோது, திமுக ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகிவிட்டன. மாதம் ரூ.1000 வழங்குவதாக கூறினார்கள்.

ஆனால், 21 மாதங்கள் ஆகியும் இன்னும் வழங்கவில்லை. எனவே முதல்வர் பிரச்சாரத்திற்கு வரும்போது ரூ.21,000 எங்கே என கேளுங்கள் என்று பெண்கள் முன் சூளுரைத்தார். விரைவில் பிரச்சாரம் செய்யவுள்ள முதல்வரிடம் பெண்கள் கட்டாயம் இந்த கோரிக்கை எழுப்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.