
செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இன்னைக்கு இந்தியா முழுவதும் தொழில் முடங்கி போய் கிடக்குன்னா…. அதற்கு பிஜேபியின் அடிப்படையான கொள்கை தான் காரணம். குறிப்பாக கோயம்புத்தூர் மட்டுமல்ல… தமிழ்நாட்டுல, சிறுகுறு தொழிலை அனைத்தும் அழிந்து போயிருக்கு…. செயல்பட முடியாம இருக்குன்னா…. அதுக்கு மிக முக்கியமான காரணம் பிஜேபியின் கொள்கை.
பொருள் கம்ப்ளீட் ஆகி மார்க்கெட்டுக்கு போகின்றபோது, அதுல பாதிக்கு பாதி ஜிஎஸ்டி என்று சொல்லக்கூடிய அப்படிப்பட்ட மோசமான வரியை போட்டது யாரு ? பிஜேபி தானே போட்டீங்க… பலமுறை நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்றத்தில் அமைச்சர்களை சந்தித்து, ஜிஎஸ்டி வரியை குறைங்க… ரத்து பண்ணுங்கன்னு கேட்டபோது, நீங்க குறைக்கவும் இல்லை. ரத்து பண்ணவும் இல்லையே.
இன்னைக்கும் இந்த நாட்டுல சிறுகுறு தொழிலில் அவங்க உற்பத்தி செய்த பொருளை விற்க முடியாமல், தேங்கி கிடக்குது. அதனால உற்பத்தி பண்ற பொருள் விற்பனை ஆகவில்லை என்று சொன்னால் ? அந்த தொழில் முடங்கி போய் இருக்குன்னா… அதுக்கு மிக முக்கியமான காரணம் பிஜேபியின் பொருளாதாரக் கொள்கை ஜிஎஸ்டி கொள்கை தானே.
நீங்க தான் ஜிஎஸ்டி போட்டிங்க. 2000 ரூபாய் நோட்டு திடீர்னு செல்லாதுன்னு அறிவிச்சீங்க. இப்படி போட்டு இருக்கிற நடவடிக்கையால் ஒட்டுமொத்த சிறுகுறு தொழில், விவசாயிகள் அழிஞ்சு போச்சே.. இன்றைய தினம் பருத்தி நூற்பாலைகள் இயங்க முடியாம தவிச்சுக்கிட்டு இருக்குது. நூற்பாலைகள் பகிரங்கமா அறிவிச்சு வேலை நிறுத்தம் பண்றாங்க தமிழ்நாட்டுல….. அடிப்படையான காரணம் என்னன்னா…? பஞ்சு விலையை தாறுமாறாக உயர்த்தி விட்டீர்கள்.
ஏனென்றால் இந்த பஞ்சு விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணமே ஏற்கனவே காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா கொள்முதல் செய்து, பருத்தியை நூற்பாலைகளுக்கு விநியோகம் பண்ணியதை மாற்றி, அவர்களை கொள்முதல் பண்ண வேண்டாம் என தடை உத்தரவு போட்டுட்டு, அம்பானிக்கு, அதானிக்கும் கொள்முதல் பண்ணுற உரிமையை வழங்கி….
அவர்கள் ஒட்டுமொத்தமான பருத்தியை குறைச்ச விலைக்கு பர்சேஸ் பண்ணி, உலக நாடுகளுக்கு பூரா ஏற்றுமதி பண்ணாங்க….. அதிகமான கொள்ளை லாபத்தை அடைப்பதற்கு நீங்கள் தான் வழி திறந்து விட்டீங்க. உலக நாடுகளுக்கு லாபம் கிடைக்கிறது என்பதனால் ? பருத்தியை அங்கு ஏற்றுமதி பண்ணிட்டு, இங்க பருத்தி இல்லைன்னு கை விரிச்சதன் விளைவு…. சாதாரணமாக ஒரு பருத்தி விலை 35 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் வரைக்கும் போச்சு.
அந்த அளவுக்கு மூணு மடங்கு விலை உயர்வதற்கு யார் காரணம் ? மத்திய அரசாங்கத்துடைய கொள்கைதான் காரணம். அதனால தான் நாங்க கூட சொன்னோம்…. தமிழக அரசு பருத்தியை வாங்க கூடிய…. பருத்தி கழகத்தை உண்டாக்க வேண்டும், உற்பத்தியை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டோம். மாநில முதலமைச்சர் கூட சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாங்கள் வரவேற்று, அந்த பருத்தி கொள்முதல் கழகத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று இந்த நேரத்திலே நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம்.