இந்தியாவின் பிரபலமான மற்றும் விலையுயர்ந்த சந்தைகளில் ஒன்றான டெல்லியில் உள்ள கான் மார்க்கெட்டில், L’Opera என்ற பிரிமியம் அவுட்லெட்டில் இருந்து வாங்கிய காபியில் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். அவர், காபியை திறந்தபோது, முதலில் காபிக்கொட்டை என்று நினைத்தார், ஆனால் நன்கு பார்த்தபோது தான் அது கரப்பான் பூச்சி என்பதை அறிந்தார்.

இந்த நிகழ்வை வாடிக்கையாளர் ரெடிட்டில் காபி பில்லுடன் புகார் செய்யும் வகையில் பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவியதோடு, பலரும் விலையுயர்ந்த கடைகளிலும் உணவின் தரம் பற்றிய கவலைகளை வெளிப்படுத்தினர். பிரபலமான சந்தைகளில் கூட சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதற்கான ஆதாரமாக இந்த சம்பவத்தை அவர்கள் குறிப்பிட்டனர்.