தமிழக பாஜக நடத்தி வரும் எண் மண், எண் மக்கள்  யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணண்மாலை, கோயம்புத்தூர் மக்களை பொறுத்தவரையில் ரொம்ப உஷாரா ஆனவுங்க. அவங்களுக்கு தெளிவா தெரியும். இத்தனை நாட்களாக கம்யூனிஸ்ட் MPயை கோயமுத்தூரில் காணோம். என் மண், என் மக்கள் யாத்திரை வந்திருக்குன்னு காலையில இருந்து சுத்திட்டு இருக்காங்க… இத்தனை நாளா எங்க போனீங்க?

உங்களை தூக்கத்தில் இருந்து எழுப்பி விடுவதற்கு என் மண், என் மக்கள் யாத்திரை கோயம்புத்தூருக்கு வர வேண்டுமா? எத்தனை பேர் உங்களை ஏமாற்றுவதற்கு  படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள்  என்று பாருங்கள்.  எங்களுக்கு தெரியும் இது நரேந்திர மோடி அய்யாவின்னுடைய  கோட்டை. அவருக்கு ஆதரவாக இருக்கக்கூடிய கோட்டை.  இந்தியாவினுடைய வளர்ச்சி..  கோயம்புத்தூருடைய வளர்ச்சி… கோயமுத்தூர் உடைய வளர்ச்சி என்பது இந்தியாவினுடைய வளர்ச்சி என்பது முழுவதுமாக தெரிந்தவர்கள் இங்கே அமர்ந்து கொண்டிருக்கிறோம்.

இன்னைக்கு பெண்கள் கொஞ்சம் பேர் சந்தோஷமா இருக்கிறீங்க….  நிறைய பேரு சந்தோசம் இல்லாமல் இருக்கிறீங்க..  ஏன்? நேத்து ஒரு வீடியோ பார்த்தேன். காமெடியா இருந்தாலும்,  அந்த வீடியோவை சொல்லணும். ஒரு கணவர் கோவப்பட்டு மனைவிய அடிக்கிறார்,  ரொம்ப தவறு.  உடனே பக்கத்து வீட்ல ரெண்டு பேர் போய் எதுக்குய்யா உன் பொண்டாட்டிய அடிக்கிற  என்று கேட்கிறான் ? 

ஏங்க உங்க பொண்டாட்டிக்கு மகளிர் உரிமை தொகை வந்துச்சான்னு கேக்குறான்….  அந்த புருஷன் வந்துச்சுன்னு சொல்றாரு… உங்க பொண்டாட்டி வந்துச்சா ?  வந்துச்சு.. என் பொண்டாட்டிக்கு மட்டும் வரலீங்க….  எப்படிங்க  மகளிர்  உரிமை தொகை கொடுக்காம இருக்கலாம். அப்போ இவ குடும்ப தலைவி இல்லையா ? இது ஜோக்காக இருந்தாலும் கூட,  பல குடும்பத்துல இதான் நடந்துகிட்டு இருக்கு என தெரிவித்தார்.