
தமிழகத்தில் ராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது. அதற்கு வாய்ப்பு இருக்கிறதா ? – என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை,
நான் தெலுங்கானாவில் கொஞ்ச நாளைக்கு முன்பு சுற்றுப்பயணம் போய் இருந்தேன். தெலுங்கானா தொண்டர்கள் மோடி இங்கதான் போட்டியிடனும்னு சொன்னாங்க. கேரளால பார்த்தீங்கன்னா…. மோடி அவர்கள் திருவனந்தபுரத்தில் வேறு இடத்தில் போட்டியிடனும். இந்தியாவுல எல்லா மாநிலத்திலும் அந்தந்த தொண்டர்கள் மோடி அவர்கள் எங்க தொகுதியில்…. எங்க ஊர்ல போட்டியிட வேண்டும் என்று சொல்வது எந்த விதத்திலும் தவறு கிடையாது.
அது அவர்களுடைய எதிர்பார்ப்பு. அதைப்போல தமிழகத்தில் கோயம்புத்தூரில் போட்டி போடணும், ராமநாதபுரத்தில் போட்டி போடணும், கன்னியாகுமரியில் போட்டி போடணும்னு… எல்லாம் எல்லா இடத்திலும் நம்முடைய தொண்டர்களும் – பொதுமக்களும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அதனால எங்களை பொறுத்தவரை மோடி அவர்களை எங்கே போட்டி போட்டாலும் சந்தோஷம்தான்.
அதுவும் குறிப்பாக தமிழகத்தில் போட்டியிட்டால்…. இரட்டிப்பு சந்தோஷம்… இதனை அதிகாரப்பூர்வமாக யாரும் இன்னும் சொல்லவில்லை. அப்படி ஏதாவது திட்டம் இருக்குன்னா…. நிச்சயம் உங்களிடம் நாங்கள் பேசுகிறோம். ஆனால் எதிர்பார்ப்பு இருக்கின்றது அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இல்லை என தெரிவித்தார்.