பான் இந்தியா அளவில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று தான் தேவரா. இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் வரும் சுட்டமல்லே என்ற பாடலுக்கு ஹீரோ மற்றும் ஹீரோயின் கவர்ச்சியாக நடனம் ஆடி இருப்பார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கல்லூரி விழா நடைபெற்றது.

அப்போது அங்கு படிக்கும் மாணவர்கள் சிலர் சுட்டமல்லே என்ற பாடலுக்கு நடனம் ஆடினார்கள். அந்தப் பாடலில் ஆடப்பட்ட அதே நடன அசைவுகளுக்கேற்ப ஒரு ஜோடி அழகாக நடனமாடியது. இதனை கீழே அமர்ந்திருந்த சக மாணவர்கள் கரகோஷத்தை எழுப்பி கண்டு மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Charan❄️ (@charan.pasumarti)