உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் 3 மாணவிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகளப்பானது. அதில் 2 மாணவிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். ஒருவரின் முடியை மற்றொருவர் பிடித்து இழுக்கவும், அடிக்கவும், தள்ளி விடவும் செய்தார். இந்த மோதலை பிரிப்பதற்காக மற்றொரு மாணவி முன்வந்த நிலையில், பின்னர் அவரும் கலந்து கொண்டு ஒருவரை தாக்கினார்.

மேலும் சில மாணவிகள் இதில் கலந்துகொண்டு, பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் முடியை இழுத்து, அடித்து, தள்ளிவிட்டு தாக்கினர். இதனால் பிற மாணவர்கள் தலையிட்டு அவர்களை பிரித்து நிலைமையை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பல்கலைக்கழகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இதுவரை காவல்நிலையத்தில் எந்த ஒரு புகார் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.