
மதுரை மாவட்டத்தில் உள்ள கரடிப்பட்டியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராகுல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் எம்.எ பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதற்காக ராகுல் சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார். கடந்த 11-ஆம் தேதி ராகுல் தான் தங்கி இருந்த அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை ஆக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ராகுல் மதுரையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனையடுத்து தமிழ்நாடு போலீஸ் பணிக்கு தயாராகி வந்த ராகுல் 3 முறை தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். இதனால் மன உளைச்சலில் ராகுல் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.