
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நிஷாந்த்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூர் சென்னசந்திராவில் தங்கிருந்து தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான சிதானந்துடன் பெங்களூர் அருகே ஒசக்கோட்டையில் உள்ள ஓட்டலுக்கு அதிகாலை 3 மணி அளவில் பிரியாணி சாப்பிடுவதற்காக சென்று உள்ளார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் மேலும் 3 பேர் சென்றுள்ளனர்.
சிட்டி மார்க்கெட் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, நிஷாந்த் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தை சாலையோரம் உள்ள தடுப்புச் சுவற்றில் மோதினார். இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிஷாந்த் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது நண்பர் சிதானந்த் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிகாலையில் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றது தான் விபத்திற்கு காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.