
ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்கின்றேன். நீ எப்ப இருந்து இந்த கட்சியில் இருக்கின்றாய், சொல்லு. அதை முதல்ல சொல்லு.. எந்த ஆண்டு நீ உறுப்பினர் அட்டை வைத்திருக்கிறாய் சொல். என்னிடம் ஒரு 8 உறுப்பின அட்டை இருக்கின்றது.
1972 லிருந்து உறுப்பினர் இருக்கு. நீ 1972 உறுப்பினர் அட்டையை காமிச்சிரு, இன்னைக்கே இந்த இயக்கத்தை விட்டு, நான் ராஜினாமா செய்து விடுகிறேன். 1972 உறுப்பினர் அட்டை இல்ல.அம்மா அணியில இருந்தவர்தானே அந்த கார்டு காமி. அதுக்கு அப்புறம் பொது செயலாளர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் -ஆல் உருவாக்க பட்டவர்கள் எத்தனையோ பேர் இருகாங்க.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் குடுத்த கார்டு…. நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி. ராமசந்திரன் என்று போட்ட கார்டு. அந்த கார்டுல இருந்து என்கிட்ட இருக்கு. வா வந்து உட்காந்து பேசு. இந்த கட்சியில சீனியாரிட்டி யாரு ? சாதாரண தொண்டனாக இருந்த என்னை… ஒரு வட்ட செயற்குழு உறுப்பினர்…. வட்ட செயற்குழு உறுப்பினராக இருந்த என்னை…. வட்டக் கழகச் செயலாளர், வட்டக் கழக பிரதிநிதி,
எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர், இளைஞர் அணி மாவட்ட கழக இணை செயலாளர், அதுக்கு அப்பறம் மாவட்ட கழக இணை செயலாளர்… .பாருங்க.. மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர்ல இருந்து மாவட்ட கழக இணை செயலாளர் கட்சி பைலால கிடையாது. அன்னைக்கு அம்மா என்னை நியமிச்சாங்க என தெரிவித்தார்.