விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள பகுதியில் ஜெயசூர்யா மற்றும் ரம்யா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது காதலை கைவிட நினைத்த காதலனை அப்பெண் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இருப்பினும் காதலியை காட்டிக் கொடுக்க விரும்பாமல் தற்கொலைக்கு முயன்றதாக ஜெயக்குமார் காவல்துறையினரிடம் கூறினார். ஆனால் எலி பேஸ்ட் கலந்து கொடுத்ததாக காதலி அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியை பார்த்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பெண்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது அப்பெண்ணின் பெற்றோர் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.