திருவண்ணாமலை அருகே நடந்த சம்பவத்தில், 50 வயதான அலமேலு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமியார் தக்சன் மற்றும் அலமேலுவுக்கு ஆன்மீக தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் சென்று வந்ததற்குப் பிறகு, அலமேலு கண்ணமங்கலம் அருகே உள்ள ஏரிக்கரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

போலீசார் நடத்தும் விசாரணையில், சாமியார் தக்சனின் கைவரிசையாக இந்த கொலை நடந்தது தெளிவானது. கண்காணிப்பு கேமராக்களில் இருவரும் ஒன்றாக வந்திருப்பது பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தக்சனை போலீசார் குன்னத்தூர் ஆன்மீக ஆசிரமத்தில் இருந்து கைது செய்தனர்.

தக்சன் அளித்த வாக்குமூலத்தில், முக்தி அடைய அலமேலுவே தனது உயிரை தியாகம் செய்ய முன்வந்ததாக கூறினார். இருவரும் ஆன்மிக சேவைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், திருவண்ணாமலை ஆன்மிகத் தலத்தில் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அலமேலுவை கொன்றதாக தக்சன் வாக்குமூலம் அளித்துள்ளார்.