
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா தீவிரவாதத்தின் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது. விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. ஆனால் இவர்களுக்கு விமானப்படை மீது நம்பிக்கை இருக்கவில்லை. சபாநாயகர் அவர்களே…. இன்று உலகிலேயே எந்த நாடும் இந்தியாவைப் பற்றி எதையும், சொல்வதில்லை. இந்தியா சொல்வதை உடனே நம்புகிறார்கள்.
ஏதாவது ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவை விட மோசமான ஒரு நாடு, அங்கே இருப்பதைவிட இந்தியாவில் பசியினால் மக்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் ? உடனே இவர்கள் இதை நம்பி விடுகிறார்கள். இத்தகைய இந்தியாவை பற்றிய எதிரான கருத்துக்களை, நம்புவது இவர்களுடைய வழக்கமாகிவிட்டது. கொரோனா பெருந்தொற்று வந்தது.
இந்திய விஞ்ஞானிகள், இந்திய வேக்சின் கொண்டு வந்தார்கள். ஆனால் அதன் மீது இவர்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. வெளிநாட்டு வேக்சின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….! கோடி கோடி மக்கள் இந்தியாவின் தடுப்பூசி மீது நம்பிக்கை வைத்தார்கள். ஆனால் இவர்களுக்கு இந்தியாவின் திறமை மீது நம்பிக்கை இல்லை. இந்திய மக்கள் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் இந்த அவைக்கு நான் சொல்ல விரும்புகின்றேன்.
இந்த நாட்டின்… இந்திய மக்களின் காங்கிரஸின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. மிகவும் ஆழமாக இருக்கிறது. காங்கிரசுக்கு மக்களிடம் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. காங்கிரஸ் தன்னுடைய கரவத்தால் நிரம்பி வழிகிறது. அதற்கு தரை நிலவரம் என்னவென்று புரியவில்லை ? என தெரிவித்தார்.