
இந்தியா- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டி கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியின் பரபரப்பான தருணங்களை பலரும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். இந்த நிலையில் இந்த கிரிக்கெட் நிகழ்விற்காக தங்களது திருமண விழாவை இடை நிறுத்தி விட்டு கிரிக்கெட்டை பார்த்த தம்பதியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், மணமக்கள் மற்றும் விருந்தினர்கள் மண்டபத்தில் பெரிய திரையில் கிரிக்கெட் போட்டியை தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தனர். விராட் கோலி சதம் அடித்து, இந்தியா வெற்றி அடைந்தபின் அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொண்டனர்.
பின்னரே திருமண நிகழ்வு நடைபெற்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் “இந்தியாவில் கிரிக்கெட் ஒரு விளையாட்டு அல்ல, அது ஒரு உணர்ச்சி” என பதிவிட்டு வருகின்றனர். இந்த நிகழ்வு இந்திய மக்களிடையே கிரிக்கெட் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வெளிப்படுத்துகிறது.
यह रहा वीडियो शादी के बीच मे मैच देखना जरुरी समझा। pic.twitter.com/prv9v3KQil
— sarita (@sarita_5M) February 24, 2025