
மதுரை மாவட்டத்திலுள்ள ஐராவதநல்லூர் பகுதியில் ஜெயலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஜெயலட்சுமிக்கு அருண்குமார் என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதற்காக ஜெயலட்சுமி சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்தனர். நேற்று முன்தினம் அருண்குமாரும் ஜெயலட்சுமியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.
பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ஜெயலட்சுமி இறந்து விட்டார். அருண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.