திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் முத்துராஜா (31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 8 வயது சிறுமிக்கு முத்துராஜா பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் முத்துராஜாவுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டது.