திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் தேனீர்குளம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீரங்கன்(29) என்பவர் கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சுரேஷ் ஸ்ரீரங்கனை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். மேலும் கத்தியால் குத்தி கொலை செய்யவும் முயன்றார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுரேஷை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நெல்லை தலைமை குற்றவியல் நீதிமன்றம் சுரேஷுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.