கோயம்புத்தூர் மாவட்டத்தில் நெல்லையை சேர்ந்த 35 வயதுடைய பெண் தனியாக குடியிருந்து டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் மகளிர் சுய உதவி குழு தலைவியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் குழுவுக்கு கடன் வாங்குவது தொடர்பாக கோவை ஒண்டிப்புதூரில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்ற போது மேலாளரான பரமசிவம்(40) என்பவர் அந்த பெண்ணுக்கு அறிமுகமானார்.

இதனையடுத்து அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட பரமசிவம் நீ யாரையும் திருமணம் செய்ய வேண்டாம், நாம் அடிக்கடி ஜாலியாக இருக்கலாம் என கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் அவரை கண்டித்து செல்போன் இணைப்பை துண்டித்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பரமசிவம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த கோவை கிழக்கு மகளிர் போலீசார் பரமசிவத்தை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம் பரமசிவத்துக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.