சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி கன்னிகாபுரம் வேளச்சேரி ரோட்டில் விஜயா(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி(22) என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் வசந்திக்கும் போரூரைச் சேர்ந்த வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனால் வசந்தி கர்ப்பமானார். ஆனால் திருமணம் ஆகாத நிலையில் தனக்கு பிறக்கும் குழந்தையை கொன்றுவிட வேண்டும் என வசந்தி நினைத்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு வசந்திக்கு பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் பானைக்குள் வைத்து மூடியதால் மூச்சு திணறி குழந்தை உயிரிழந்தது. அதன் பிறகு குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விஜயா, வசந்தி, அந்த வாலிபர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயா, வசந்தி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். வாலிபர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.