கரூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு வசந்தகுமார் 10-ஆம் வகுப்பு மாணவியை வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என வசந்தகுமார் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வசந்தகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி வசந்தகுமாருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.