தமிழகத்தில் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளான அதிமுக,  திமுக தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளனர். தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் பிரசாரக்குழு, தேர்தல் அறிக்கை குழு, விளம்பர குழு எல்லாம் அமைக்கப்பட்டு, அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றார்கள்.

ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவும் அந்த பணிகளை ஜெட் வேகத்தில் செய்து வருகின்றது. அந்த வகையில் வரக்கூடிய பிப்ரவரி 3ஆம் தேதி முத்தரசன் தலைமையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு குழு பேச அழைப்பு விடுத்துள்ளது.

அதே போல 4ஆம் தேதி  கே.பாலகிருஷ்ணன் தலைமையில் தமிழகத்தில் செயல்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடன் பேச்சுவார்தையும்,மாலையில் வைகோ தலைமையில் செயல்படும் மதிமுகாவுடன் பேச்சுவார்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.