இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி. இவர் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 68 டெஸ்ட் போட்டிகள், 138 ஒரு நாள் போட்டிகள், 92 டி20 போட்டிகள், 352 லீக் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவர் ஏற்கனவே 2 முறை ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் தனது முடிவை வாபஸ் பெற்றார். ஆனால் இந்த முறை மீண்டும் தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன் எனவும் ஓய்வு அறிவித்தது அறிவித்தது தான் என்றும் மொயின் அலி கூறியுள்ளார். மேலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் கூறியுள்ளார். அவருடைய ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ‌