உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற வருகிறது. இந்தப் போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சி செய்து வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப்  பொறுப்பேற்ற பிறகு, இதற்கான பேச்சுவார்த்தை தீவிரமடைந்தது. இந்நிலையில் கியேவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, உக்ரைனில் அமைதி நிலவ, நான் பதவி விலக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நான் பதவி விலகுகிறேன்.

உக்கிரேனுக்கு நோட்டா உறுப்பினர் பதவி கொடுத்தால் நான் அதிபர் பதவியை விட்டு விலக தயார். நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் உடனடியாக நான் இதை செய்கிறேன். மேலும் நான் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சில விஷயங்களை கூற விரும்புகிறேன். உக்ரைனின் நிலைப்பாட்டை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் தாக்குதலால் நாங்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே டிரம்ப் ரஷ்யாவிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மத்தியஸ்தனம் செய்யும் நபராக மட்டும் அவர் இருக்கக் கூடாது என்று தெரிவித்தார்.