
ஹைகோர்ட் உத்தரவின் படி பெண்கள் 20 வாரத்திற்கு மேற்பட்ட கருவை கோர்ட் உத்தரவின் பேரில் மட்டுமே கலைக்க வேண்டும். மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் 20 வாரத்திற்கு மேற்பட்ட கருவை கலைக்கும்போது குழந்தைக்கு மட்டுமல்லாமல் கருவுற்றிருக்கும் பெண்ணிற்கும் ஆபத்து ஏற்படலாம். இந்த நிலையில் 11 வயது சிறுமியின் தந்தை ஹைகோர்ட்டில் மனு கொடுத்துள்ளார். இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தன்னுடைய 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனால் அவர் 11 வாரம் கருவுற்றுள்ளார்.இந்த கருவை கலைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனு மும்பை ஹைகோர்ட்டில் நீதிபதிகள் ஷர்மிளா தேஷ்முக், ஜித்தேந்திர ஜெயின் ஆகியோர் அமர்வு முன்பு நடைபெற்றது.
இந்த மனுவிசாரணையில் நீதிபதிகள் கூறியதாவது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் 18 வயதுக்கு குறைவான வயதுடைய பெண் என்பதால் அவரது கருவை கலைக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அந்த மைனர் பெண்ணுக்கு குழந்தை உயிரோடு பிறந்து விட்டால் அதனை காப்பாற்றுவது மருத்துவமனையின் கடமையாகும். மேலும் குழந்தையின் பெற்றோர் குழந்தையை வளர்க்க முடியவில்லை எனில் மாநில அரசு அந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ளும். சிறுமிக்கு அநீதி இழைத்தவர்கள் யார் என்பதை கண்டறிவதற்கு சிறுமியின் இரத்த, சதை மாதிரிகளை பத்திரப்படுத்தி வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.