பஞ்சாபில் கடந்த 2015 ம் ஆண்டு ஓம்கார் சிங் என்பவர் மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறகண்டனை விதிக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா காலகட்டத்தில் அவரது தண்டனை காலம் முடிந்தது. இதற்கிடையில் அந்த சிறுமியும் அவரது தந்தையும் இறந்துள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த சிறுமியின் சகோதரர் லவ்ப்ரீத் சிங்(19) என்பவர் ஓம்கார் சிங் வெளியே வந்ததை அறிந்தார். இதனால் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அன்று அவரும், அவரது நண்பருமான ஆகாஷ்தீப் என்பவரும் சேர்ந்து ஓம்கார் சிங் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொன்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு காவல்துறையினர் தலைமுறைவான 2 பேரையும் தேடி வந்தனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்த அந்த சிறுவனை அழைத்துச் சென்றபோது, அவர் தலையை உயர்த்தி சிரித்துக்கொண்டு, ஹாய் சொல்லி பெருமையுடன் நடந்துள்ளார். இதுதொடர்பான வீடியோஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.