
ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 23-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. அந்த போட்டிக்கான டிக்கெட் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை 10.15 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. டிக்கெட்டின் விலை 1700 முதல் 7500 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. www.chennaisuperkings.com என்ற இணையதளம் மூலமாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும் அந்த டிக்கெட்டை காண்பித்து சென்னை மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.