இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 18-வது ஐபிஎல் சீசன் நடைபெற்று வரும் நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு முன்பாக வீரர்கள் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர். அதன்படி கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருக்கும் ப்ராவோ சென்னை வீரர்கள் பயிற்சி செய்யும் இடத்திற்கு வந்தார்.

அவரை பார்த்தவுடன் தோனி துரோகி வாரார் பாருங்கள் என்று நகைச்சுவையாக கூறினார். அங்கு வந்த ப்ராவோ தோனி மற்றும் ஜடேஜா உடன் மிகவும் நகைச்சுவையாக கலந்துரையாடினார். அதாவது சென்னை அணைக்காக முன்பு பிராவோ விளையாடிய நிலையில் 2 முறை பயிற்சியாளராக இருந்துள்ளார். பின்னர் அவர் கொல்கத்தா அணிக்கு மாறிவிட்டதால் நகைச்சுவையாக துரோகி என்ற தோனி குறிப்பிட்டார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக வருகிறது.