
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதி போட்டியில் நேற்று இந்தியா ஆஸ்திரேலியா உடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸி அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. ஆஸி அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்கள் வரை எடுத்தார். இந்திய அணியில் முகமது ஷமி 3 விக்கெட்டுகள் வரை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 48.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 45 ரன்களும், விராட் கோலி 84 ரன்களும் எடுத்தனர். தொடர்ச்சியாக 14 முறை ஆஸ்ரேலியாவிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில் இந்த முறை அந்த அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மோதிய அரை இறுதி போட்டி ஜியோ ஹாட்ஸ்டார் இல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது முதல் இன்னிங்ஸ் முடிவதற்குள் 66.9 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் லைவ் ஸ்ட்ரீமிங் பார்த்துள்ளனர். இதற்கு முன்பு இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற போட்டியை 40 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டியை 60.2 கோடி நேரலையில் பார்த்தனர். முன்னதாக பார்டர் கவாஸ்கர் போட்டியின் போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற போட்டியை 19 .20 கோடி பார்வையாளர்கள் பார்த்திருந்தனர். தற்போது இந்த சாதனை எல்லாம் நேற்று நடைபெற்ற போட்டியில் முறியடிக்கப்பட்டு அதிக அளவிலான பார்வையாளர்கள் நேரலையில் பார்த்துள்ளனர். மேலும் jio hotstar இருவகையிலான சந்தா திட்டங்களை வழங்குகிறது. அதன்படி,
விளம்பர ஆதாரத்திலான (ad-supported) மற்றும் பிரீமியம் (premium) திட்டங்கள்.
• விளம்பர ஆதாரத்திலான சந்தா:
• 3 மாதங்கள் – ₹149
• 1 வருடம் – ₹499
• பிரீமியம் சந்தா (விளம்பரமில்லாத திட்டம்):
• 1 மாதம் – ₹299
• 3 மாதங்கள் – ₹499
• 1 வருடம் – ₹1,499
இவை விளம்பரங்களின்றி சிறந்த தரத்தில் நேரடி போட்டிகளை அனுபவிக்க வாய்ப்பு அளிக்கின்றன.