
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் நாம் தமிழர் சாட்ட துரைமுருகன் எடுத்த நேர்காணலில் கலந்து கொண்டு பேசினார். இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் சீமான் நகைச்சுவையாக சொன்ன ஒரு கதை தற்போது சோசியல் மீடியாவில் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் சீமான் கூறியதாவது, என்னுடைய வீட்டு மாடியில் தினமும் புறாக்களுக்கு இரை வைக்கிறோம்.
அதேபோன்று மற்ற பறவைகளுக்கும் நாங்கள் சோறு வைப்போம். ஆனால் எங்கள் வீட்டுக்கு வரும் காக்கைகள் சோறு சாப்பிடாது. தினமும் 15 அவிச்ச முட்டைகளை வைத்தால் அவைகள் நன்றாக சாப்பிடும். குறிப்பாக நெய் சோறு தான் காக்கைகள் சாப்பிடும். தினந்தோறும் மாலை 3 மணிக்கு மாமரத்தில் வந்து அனைத்து காக்கைகளும் அமர்ந்து விடும். அவைகளுக்கும் தெரியும் சீமான் வீட்டுக்கு போனால் இதெல்லாம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோவை தற்போது நெட்டிசன்கள் பகிர்ந்து சீமான் சொன்ன காக்கை கதையை கலாய்த்து வருகிறார்கள்.
காக்கா கதை 🤭
சீமான் வீட்டு காக்கா முட்டை மட்டும் தான் சாப்பிமாம் நெய் சோறு தான் சாப்பிடுமாம் சீமான் தான் காஸ்ட்லியா இருக்கார்ன்னு பார்த்தா காக்கா கூட காட்ஸ்லியா இருக்கு
ஆனா அதுக்கு டைம் எல்லாம் தெரிந்திருக்கு பாருங்களேன் சரியா 3 மணிக்கு சீமான் வீட்டுக்கு முட்ட சாப்பிட… pic.twitter.com/zlmcDgWnK2
— கபிலன் (@_kabilans) March 10, 2023