தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் இன்று  முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி இன்று ஆகஸ்ட் 31 ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதாவது மாமன்னர் பூலித்தேவனின் 309 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 நபர்களுக்கு மேல் ஒரு இடத்தில் கூடி நின்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.