ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் பாம்பன், சோளியக்குடி, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் 1650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 6000-க்கும் மேற்பட்ட நாடுகள் மீன்பிடிக்க கடந்த நான்கு நாட்களாக செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் கரையை கடந்ததால் மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதனால் இன்று ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நான்கு நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிகப்படியான மீன்கள் கிடைக்கும் என்ன மீனவர்கள் எதிர்பார்த்து சென்றுள்ளனர்.