இயக்குனர் கணேஷ் கே. பாபு இயக்கியுள்ள “டாடா” என்ற திரைப்படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த படத்தினை ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இந்நிலையில் “டாடா” பட டீசரை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், நெல்சன் திலிப் குமார், நடிகர் ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். காமெடி பாணியில் இருக்கும் டீசர் ரசிகர்களிடைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.