செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2019 நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையை படிச்சு பாருங்க அதுல தெளிவா குடுத்து இருக்கோம். அரசினுடைய மருத்துவ துறை சரியா செயல்படவில்லை என நாங்க சொல்றத விட நீங்கதான் சொல்லணும். நாங்க சொன்னா… எதிர்க்கட்சி சொல்லுது சொல்லுவாங்க. இன்னைக்கு நாட்டுல  என்ன நடந்திருக்குன்னு பாருங்க ?

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில இந்த மருத்துவத்துறை எவ்வளவு சிறப்பா இருந்தது. எண்ணி பாருங்க… பத்தாண்டு காலம் ஒரு பொற்கால ஆட்சி. மருத்துவத்துறையில் நாங்கள் மிகப்பெரிய சாதனை நாங்க படைத்தோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்ந்து மூன்று ஆண்டு காலம் தேசிய அளவுல நாங்க முதன்மையை இருந்து விருதுகளை பெற்றோம்.

இன்றைக்கு 4-வது இடம் போயிருக்குனு நினைக்கிறேன். அதோட கொரோனா காலத்துலையும் மிக சிறப்பா செயல்பட்டு விலைமதிக்க முடியாத உயிரை காப்பாற்றியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான். இன்றைக்கு நாட்டிலே எத்தனை மாநிலம் இருந்தால் கூட,  ஒவ்வொரு மாதமும் கொரோனா காலத்துல மாண்புமிகு பிரதமர் அவர்கள் காணொளி காட்சி மூலமா ஒவ்வொரு மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடு எப்படி இருக்கு என்பதை ஆய்வு செய்வார் ? அந்த ஆய்வு செய்கின்றபொழுது…

மாண்புமிகு பாரத பிரதமர் சொன்ன கருத்து,  தமிழ்நாடு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவத்திலே முதல் மாநிலம், அதைபின்பற்றுங்க என சொன்னார். அந்த அளவுக்கு விலை மதிக்க முடியாத அளவுக்கு உயிர்களை காப்பாற்றினோம். இன்றைய தினம் இந்த விடியா திமுக அரசு  திராவிட மாடல் என்று தங்களையே தாங்கள் புகழ்ந்து கொண்டு இருக்கின்ற இன்றைய முதல்வர் ஸ்டாலின்…

அவருடைய அமைச்சரவையில் இருக்கின்ற மா.சுப்பிரமணியம்… மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அவர், வெறும் பேட்டி தான் கொடுக்கின்றார். நிர்வாக திறமையே இல்ல. 2 ஆண்டு காலத்துல மருத்துவத்துறை சீரழிந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இன்னைக்கு பல இடங்கள்ல புகார் நடக்குது.

இந்த குழந்தைக்கு கூட ஒரு கை அகற்றப்பட்டு விட்டதாக பத்திரிகைளையும்,  ஊடகத்துலையும் செய்தி வந்தது உண்மையிலேயே வேதனைக்கு உரிய விஷயம். என்னென்று சொன்னால்,  ஒரு குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு தான் அந்த கஷ்டம் தெரியும். அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தான் அந்த வலி தெரியும். அதை இந்த அரசு உணர வேண்டும். உரியமுறையிலே சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அந்த குழந்தைக்கு இந்த கையை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது என தெரிவித்தார் .