
ஆதார் என்பது ஒவ்வொரு தனி மனிதரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக, இந்திய அரசாங்கத்தின் சார்பாக தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையின் எண்ணாகும். இந்த ஆதார் அடையாள அட்டையை டவுன்லோட் செய்வதற்கு மொபைல் எண் தேவைப்படும். ஆனால் தற்போது ஆதார் விண்ணப்பிக்கையில் அளித்த மொபைல் எண் இல்லை என்றாலும், அதனை டவுன்லோட் செய்ய முடியும்.
அதற்கு முதலில் UIDAI இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு “MY SUPPORT” என்ற பகுதியை அழுத்தவும். அதன் பின்னர் ஆதார் PVC Card என்பதை அழுத்தவும். ஆதார் எண்ணை உள்ளிட்டு “MY MOBILE NUMBER IS NOT REGISTER” என்பதுக்குள் செல்ல வேண்டும். அங்கு மாற்று மொபைல் எண்ணை உள்ளிட்டு அதில் வரும் OTP யை பதிவிட்டால் ஆதாரை டவுன்லோட் செய்யலாம்.