அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹரிஷும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகின்றனர். உலகப்புகழ் பெற்ற பால்பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் கமலஹாரிசுக்கு வாக்களிக்க போவதாக கூறியிருந்தார். அவரது இன்ஸ்டடா பதிவை கிண்டலடிக்கும் விதமாக எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் “நீங்கள் வென்று விட்டீர்கள் டைலர். நான் உங்களுக்கு ஒரு குழந்தையை தருகிறேன். அதோடு உங்கள் பூனையை நான் வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கிறேன்” என கூறியிருந்தார். இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் எலான் மஸ்கின் மகள் வில்சன் அந்த பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது, “நானும் இந்த பதிவை பார்த்தேன். அதில் நான் எதையும் சேர்க்க விரும்பவில்லை. இது மிகவும் வெளிப்படையானது. நீங்கள் பிரச்சனையின் ஒரு அங்கமாக இருக்கிறீர்கள். மக்கள் உங்களிடம் அப்படி பேசுவதை அனுமதிக்க வேண்டாம். இது அருவருப்பாக உள்ளது. டெய்லர் ஸ்விஃப்ட் கமலா ஹாரிஸ் ஆதரிப்பதற்கு இதைவிட சிறந்த சமயம் எதுவும் இருக்க முடியாது. தேர்தலில் ஸ்விஃப்ட் வாக்களிப்பதை காண காத்திருக்கிறேன். நீலத்திற்கு ஓட்டு போடுங்கள்” என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.