
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு தலையில்லாமல் இளம்பெண் ஒருவரின் உடல் நிர்வாண நிலையில் சாலையில் வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் தலையை துண்டித்து பெண்ணை நிர்வாண நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் வீசி சென்றுள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவர்கள் இளம்பெண் சடலத்தை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாத நிலையில் ஒரு இளம் பெண் நடந்து செல்வது மட்டும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அந்த பெண் யார் என்பது சரிவர தெரியவில்லை. இருப்பினும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் உத்திரபிரதேசத்தில் ஆளும் பாஜக அரசினை எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வருகிறது.