
இந்தியாவில் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர்களில் ஐபிஎல் போட்டி மிகவும் பிரபலமானது ஆகும். நடப்பு ஆண்டில் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ஐபிஎல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தற்போது ஐபிஎல் நிர்வாகத்தின் தலைவர் அருண் துமால் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஐபிஎல் தொடர் வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் நிலையில், வாய்ப்பு கிடைத்தால் அதே வருடத்தில் மீண்டும் ஒரு ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த தகவல் தற்போது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.