
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சருடைய கவனம் எல்லாம் ஆட்சியில் இல்லை. எப்படி நம்முடைய மகன் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக கொண்டு வந்து, முதல்வராக கொண்டு வருவது. நமக்கு தெரியும் திமுகவை பொருத்தவரை…. மிக எளிதாக அவங்களால் முடிவு எடுக்க முடியும்.
அறிவாலயத்தில் ஒரு நிமிஷத்துல முடிவு எடுத்து, அதை தொண்டர்களுக்கு ரெண்டு நிமிஷத்துல சொல்லி, தொண்டர்கள் மூன்று நிமிஷத்துல ஏத்துப்பாங்க. இது அறிவாலயத்தினுடைய டெசிஸன் மேக்கிங். ஏனென்றால் ஒரு குடும்பம் மட்டும் ஆட்சியில் இருக்கிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை அப்படி இல்லை. அண்ணே…
பாரதிய ஜனதா கட்சியில் உட்கட்சி பிரச்சனை. அவுங்க என்னை பார்க்கவில்லை, இவுங்க என்னை பார்க்கவில்லை என நிறைய பேரு சொல்லுவார்கள். அந்த தலைவருக்கு சேர் போடல…. இந்த தலைவர் அப்படி போடல என பேசுவாங்க. இந்த கட்சியினுடைய பியூட்டியே… இதைப்போன்ற சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு இடையே ஜனநாயகத்தை வளர்ப்பது தான் இந்த கட்சி. உலகத்திலேயே உண்மையான பரிபூரணமான தலையிலிருந்து கால்வரை முழுவதுமான ஒரு ஜனநாயக கட்சியாக இருப்பது பாரதிய ஜனதா கட்சி.
நேச்சுரலி பிரச்சனைகளும் அதிகமாக தான் இருக்கும். ஏனென்றால் அண்ணாமலை ஆர்டர் போட முடியாது. அண்ணாமலையும் இந்த கட்சியில் ஒரு தொண்டன், சேவகன். எல்லாத்துக்கும் இழுத்து, பேசி…. அத பண்ணலாமா ? இது பண்ணலாமா ? என யோசிக்க முடியும். கிளை தலைவர் ஆர்டர் போட முடியாது என தெரிவித்தார்.