
டெல்லியில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து அதிரடியான நடவடிக்கை எடுக்க கோரி, பாஜக எம்எல்ஏக்கள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு அளித்துள்ளனர். இதன் மூலம், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி அரசு சிக்கலில் சிக்கியிருக்கிறது. குறிப்பாக, முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில், டெல்லி அரசு செயல்பட முடியாத சூழ்நிலையில் இருப்பதாக பாஜக கூறி, அந்த அரசை கலைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
குடியரசு தலைவர் முர்மு, பாஜக எம்எல்ஏக்கள் அளித்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். இது அரசியலமைப்புச் சட்டம் முறைப்படி பரிசீலிக்கப்படும் என கூறப்படுகிறது. கெஜ்ரிவால் அரசின் ஆட்சிக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் பல முறை எதிர்ப்புகளை முன்வைத்ததுடன், தற்போதைய நிலைமை மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது.
இந்த சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது கண்காணிக்கப்படுகிறது. கெஜ்ரிவால் அரசு தொடருமா அல்லது பாஜக அளித்த கோரிக்கைக்கு ஏற்ப டெல்லி அரசை கலைக்க நடவடிக்கை எடுக்குமா.? அரசியல் சூழலை பொறுத்து அமையும் என கூறப்படுகிறது.