
விஜயின் கட்சி மாநாட்டுக்கு திமுக அரசு அனுமதி தருவதில் என்ன பிரச்சனை. கார்ரேஸ் நடத்துவதற்கு ஒரே இரவில் அனுமதி பெற முடிகிறது. ஆனால் முறைபடியாக மாநாடு நடத்த அனுமதி கேட்கும் விஜயின் கட்சிக்கு அனுமதி கொடுக்க மறுப்பது ஏன்?. ஜனநாயக நாட்டில் கட்சிகளை நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு.
அப்படி இருக்கும்போது மாநாட்டிற்கு அனுமதி கொடுக்காததற்கு என்ன காரணம். இங்கு யாரும் யாரு வளர்ச்சியும் தடுக்க முடியாது. நடிகர் விஜய் இப்போதுதான் கட்சியை தொடங்கியுள்ளார். கட்சிகளை சில காலம் நடத்தட்டும். அதன் பிறகு அவருடன் கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் பிரேமலதா கூறினார்.