தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை பொருத்தவரை அங்கு ஒரே ஒரு குடும்பத்திற்காக மொத்த கட்சியின் வேலை செய்து கொண்டிருக்கிறது. மகனும்,  மருமகளும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக முழு ஆட்சியும் நடந்து கொண்டிருக்கிறது.  30 ஆண்டு காலமாக திமுக ஆட்சியில் இருக்கிறது…  சாதாரண பொது மக்களை பற்றி கவலை இல்லை….

இன்றைக்கு பாருங்கள் மே 28ஆம் தேதி 2023 இந்த வருடம்….  இங்க இருக்கக்கூடிய அதிகாரி, வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் அவர்கள் மணல் கடத்தலை தடுக்க போறாரு… இங்க இருக்கக்கூடிய திமுகவினுடைய ஊராட்சி மன்ற தலைவர்….  அந்த வருவாய் அதிகாரிக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

திமுகவினுடைய ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ் அவர்கள்… தனபால், கந்தசாமி, இவர்களையெல்லாம் போய்… கம்பி எடுத்துட்டு போய்…. அந்த  அதிகாரிகளை ஆபாசமாக திட்டி…. ஆயுதங்களை வைத்து கொடூரமாக தாக்கி,  மண்டையை உடைத்து….. அவர்களுடைய முதுகுபகுதியில்  கடித்து வைத்திருக்கிறார்கள்… இது போலீசின் அறிக்கை சொல்கிறது….  இவர்கள் எல்லாம் யாருன்னு பார்த்தால்….  திமுகவினுடைய ஊராட்சி மன்றம் தலைவர்கள்….  ஒரு பக்கம் குடும்பம் அங்கே சென்னையில் அமர்ந்து கொண்டு….. தமிழ்நாட்டை சூறையாடிக் கொண்டிருந்தால்….

ஆற்றையும்,  ஆற்று மண்ணையும் எந்த அளவிற்கு கொள்ளை அடிப்பது தன்னுடைய தனிப்பட்ட லட்சியமாக  திமுககாரன் வைத்திருக்கிறான்….  ஒவ்வொரு ஊரிலும் படித்துக் கொண்டே போகலாம்…..  தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கிராம நிர்வாக அலுவலராக இருந்தாலும் சரி,  வருவாய் ஆய்வாளராக இருந்தாலும் சரி….. துப்பாக்கியை வைத்துக்கொண்டு அரசு வேலையை பார்க்கும் அளவிற்கு நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது.

இப்படி இருந்தால் வளர்ச்சி எப்படி வரும் ? எப்படி இங்கே  கல்லூரி வரும் ?  எப்படி இங்கே ரயில் வந்து நிற்கும்…. இதையெல்லாம் அவர்களுக்கு  கவனம் கிடையாது….. இங்கு  இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளுக்கு   எந்த அளவிற்கு மக்களின் பணத்தை கொள்ளையடித்து,  சம்பாதிக்கலாம் என்பதை மட்டும் தான் முழு நேரம் வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.